flipkart discount sale search here.

Sunday, 12 November 2017

Government SETUP BOX ...இது எனக்கு வந்த செய்தி...!!!

SETUP BOX...இது எனக்கு வந்த செய்தி...!!!

விரைவில் உங்கள் வீடு தேடி வர இருக்கும் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பற்றி சில விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறேன்.

அணைத்து வீடுகளுக்கும் இலவச அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் திட்டம் பல இடங்களில் கொடுக்க தொடங்கி விட்டார்கள் விரைவில் உங்கள் வீடு தேடி வரும்.

இந்நிலையில் இலவச செட்டப் பாக்ஸ் க்கு ஆப்ரேட்டர்கள் 500 ,600 ஏன் 1000 வரை கூட வசூலித்து வருகிறார்கள். எனவே  ஏமாறாமல் இருக்க கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் குறித்த சில முக்கிய தகவல்களை நான் பகிர விரும்புகிறேன்.

✴ முதலில் ..... 200 ரூ இன்ஸ்டாலேஷன் பீஸ் என்று கேட்பார்கள் . ஆம் அது உண்மை தான் அந்த 200 ரூ நாம் தர தான் வேண்டும்.

✴ ஆக்டிவேஷன் பீஸ் என்று 100 ரூ கேட்பார்கள் கேட்டால் அரசு வசூலிப்பதை தான் கேட்கிறோம் என்பார்கள்...சுத்த பொய் அரசு அப்படி
எந்த கட்டணமும் கேட்க வில்லை.

✴ மாதம் தோறும் ரீச்சார்ஜ் என்று gst அது இது எல்லாம் சேர்த்து 200 ,250 க்கு கிட்ட தட்ட கேட்பார்கள்.
இது ஓரளவு சரி தான் ஆனால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது ,அதில் 125 பேக்.. 175 பேக் என்று பல வகை உள்ளது. யாவற்றையும் நீங்கள் ஆப்ரேட்டர் வழியாக தான் கட்ட போகிறீர்கள் என்பதால் அவர்கள் உங்களுக்கு எந்த பேக் ஆக்டிவ்ட் செய்துள்ளார்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்று கவனிக்கவும் (125 ரூ க்கு கிட்ட தட்ட 200 சானல் வரும் )

✴ இதை தவிர வேறு எந்த கட்டணமும் இல்லை உங்கள் செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசம் தான் .வேறு கட்டணம் கேட்டால் தைரியமாக காரணம் கேளுங்கள். குறிப்பாக கிராம புற மக்கள் போதிய தகவல் இல்லாமல் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக கேபிள் டிவி சார்ந்த புகார்களை அளிக்க வேண்டிய நம்பர் கொடுக்கிறேன்..குறித்து கொள்ளுங்கள்.
18004252911

✴அதே போல மேலும் தங்களுக்கு அரசு கேபிள் டிவி சார்ந்த பொது தகவல்களுக்கு கிண்டி யில் உள்ள தலைமை அலுவலக போன் நம்பர் ...
04428432911 குறித்து கொள்ளுங்கள்.
விழிப்புடன் செயல் படுங்கள்...

(சமீபத்தில் தான் வீட்டில் அம்மா 600 ரூபாய் கொடுத்து இருந்தார் . பிறகு நான் சம்பந்த பட்டவர்களிடம்  தெளிவாக விளக்கம் கேட்ட பின் பணத்தை திரும்பி தருவதாக ஒத்து கொண்டார்கள்.

இது பலருக்கும் உதவுமே என்று தான் இதை பகிர்ந்தேன் )

இந்த வீடியோ பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=3Q3SncD0lh4

No comments:

Post a Comment