flipkart discount sale search here.

Thursday 29 November 2018

Life Story #18

*தினம் ஒரு கதை..*


_அது ஓர் அழகிய நகரம்.._
_அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார்.._
_ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான்.._
_அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம்_ *ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?* என்று கேட்டான்..

அதற்குக் காவலாளி *ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?* என்று சந்தேகத்துடன் கேட்டார்..

*ஆமாம் பெரியவரே.. நான், முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம்.. எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க.. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும், திட்டிக்கிட்டும்.. எப்படா, அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது.. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?* என்று கேட்டான்..

*நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம்.. போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும்.. நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி* _என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார்.._

_சிறிது நேரம் கழித்து,_

_அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியை வேறுமாதிரி கேட்டான்.._
*ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன்.. இந்த ஊர் மக்கள் எப்படி?* என்று..

_பெரியவர் சிரித்துக்கொண்டே.._ *ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?* என்று கேட்டார்..

*ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா* என்றான்..

*அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல?* என்றார் காவலர்..

*எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க.. எனது குடும்பம் இப்போது சிறிது வறுமையில இருக்கிறது.. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன்.. நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்..* என்றும்.. _கண் கலங்கியபடியே கூறினான்.._

*அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க.. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்* _என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.._

_காவலாளியின் அருகில் இருந்த ஒருவர், இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.._

உடனே அவரிடம் *முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?* என்று சந்தேகத்துடன் கேட்டார்..

அதற்குப் பெரியவர்  *இந்த உலகம் கண்ணாடி மாதிரி.. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'..* என்றார்..


👇
இயற்கை (உலகம்) நிலையானது..
*நாம் என்ன கொடுக்கிறோமோ.. அதைத்தான் நமக்கு திரும்ப தரும்..*

No comments:

Post a Comment