flipkart discount sale search here.

Friday, 23 November 2018

Life Story #9

*தினம் ஒரு கதை..*

_பறக்கும் பருவத்தை அடைந்த இரண்டு வெள்ளை நிற புறாக்களின் தாய் தனது இரண்டு குஞ்சுகளின் திறமையினையும் பரிசோதிப்பதற்காக ஒருநாள் தனது இரண்டு குஞ்சுகளையும் அழைத்து.._

_*உங்களுக்கு பறந்து இரை தேடும் அளவுக்கு சிறகுகள் வளர்ந்துவிட்டன.. நீங்கள் இனி தாராளமாக வெளியில் பறந்து சென்று உங்களது இரைகளை தேடி பெற்றுக்கொள்ளுங்கள்,*_
*_நீங்கள் இரையை பெற்றுக்கொள்ளும் ரகசியத்தை மாத்திரம் ஒருத்தரிடம் ஒருத்தர் சொல்லிக்கொள்ளக்கூடாது_* _என கண்டிசன் போட்டு_ _*இன்றில் இருந்து நான் உங்களுக்கு சாப்பாடு தருவதை நிறுத்திக்கொள்கின்றேன்*_ _எனக்கூறியது தாய் புறா.._

_இரண்டு குட்டிப்புறாக்களும் தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க தங்களது இரையை தேட ஆரம்பித்தன.._

*_அதில் ஒரு புறா தினமும் காலையில் சேற்றில் விழுந்து அழுக்காகிக்கொண்டே இரை தேட ஆரம்பிக்கும் இரை தேடி முடிந்ததும் ஆற்றில் கழுவிக்கொண்டு வீடு செல்லும்.._*

_இதைப்பார்த்த மற்றப்புறா_ _*நீ அழுக்கோடு என்னுடன் வருவதால் எனக்கு கேவலாமாக இருக்கின்றது.. உன்னை பார்க்கும் மனிதர்கள் எல்லாம் உன்னை கவனிக்காமல் ஒதுக்கி விடுகின்றார்கள், என்னை பார்க்கும் மனிதர்கள் எல்லாம் என் அழகை ரசிக்கின்றார்கள்.. நீ முட்டாளைப்போல நடந்துகொள்ளாதே..*_ என தினமும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும்..

சரியாக இரண்டு வாரங்கள் கழிந்து தாய்ப்புறா தனது இரண்டு குஞ்சுகளையும் அழைத்து சோதனை செய்ததில் ஒரு புறா நன்றாக கொழுத்துப்போய் இருந்தது மற்றப்புறா எலும்பும் தோலுமாய் இருந்தது..

_கொழுத்துப்போய் இருந்த புறாவை அழைத்து_ _*நீ இவ்வளவு பிரகாசமாக இருக்கின்றாய்.. உனது சகோதரன் ஏன் இப்படி எலும்பாக தேய்ந்துள்ளான்?*_ எனக்கேட்டது..

அம்மா _*நான் தினமும் காலையில் சேற்றில் குளித்துக்கொண்டு இரை தேடச்செல்வேன்.. நான் அழுக்காக இருப்பதால் மனிதர்கள் யாரும் என்னை கண்டுகொள்ளமாட்டார்கள்.. நான் விரும்பியவாறு விரும்பிய இடத்தில் எனது வயிறு நிறைய இரைகளை பெற்றுக்கொள்வேன்..*_

*_அண்ணன் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால்.. அவனால் நிம்மதியாக இரை தேட முடிவதில்லை.. மனிதர்கள் அவனை கண்டால் பிடிப்பதற்கு துரத்துகின்றார்கள்.. அதனால் அவன் இரை தேடும் நேரத்தை விட உயரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் நேரமே அதிகம்.. அதனால் குறை வயிற்றோடு தினமும் திரும்பி விடுவான்.. ஆகவேதான் அவன் பசியால் வரண்டு மெலிந்து போய் உள்ளான்.._* என பதிலளித்தது..

இப்பதிலை கேட்ட தாய்ப்புறா தன் குஞ்சின் புத்திக்கூர்மையினை நினைத்து மெய்சிலிர்த்துப்போய் மற்றப்புறாவை அழைத்து _*உனது தம்பி எவ்வாறு நடந்து கொள்கின்றானோ அவ்வாறே நீயும் நடந்துகொள், அது உன்னையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும்.. உனது வயிற்றையும் குறைவில்லாமல் நிறைவடையச் செய்யும்..*_ எனப்புத்திமதி கூறி மறுநாள் காலை *தாய்ப்புறாவும் தனது குஞ்சுகளோடு சேர்ந்து சேற்றில் குளித்துக்கொண்டு இரை தேடச்சென்றது..*


👇
*நாம் எவ்வளவுதான் அழகு மற்றும் அறிவோடு இருந்தாலும்.. இடத்துக்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக் கொள்ளாவிடின் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் முடியாது.. நிம்மதியாக வாழவும் முடியாது..*


No comments:

Post a Comment