flipkart discount sale search here.

Monday, 31 December 2018

இல்லையென்றால், நீங்கள்தான் அவர்களின் அடிமை..!

தயவுசெய்து கட்டண💵 சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்...🙏🏻

பின்னர், அவர்களே நம் வழிக்கு இலவச சேனல்களாக மாறுவார்கள். இல்லையென்றால், நாம் மாறாமல் அவர்களை மாற்றுவோம். கோடிகணக்கில் 🎷🎫🎟🎞 விளம்பரத்தில் கொள்ளை🤣🤓 அடிப்பது போதாமல், நாம் வேறு அழவேண்டுமா..?🧐

எனவே, ஒற்றுமையே பலம். யாருமே💪 கட்டண சேனல் பார்க்காவிட்டால், விளம்பர😍 நிறுவனம் தன் விளம்பரத்தை நிறுத்திவிட்டு, இலவச🤓 சேனல்களுக்கு விளம்பரதாரர் திரும்புவர்.👍 பின்னர், கட்டண சேனல்களும் நம் பக்கம் திரும்பியே ஆகவேண்டும்..!👏

ஒற்றுமையே பலம்👍

தொலைக்காட்சி சேனல்களுக்கு நாம் அடிமையா..? நமக்கு தொலைக்காட்சி சேனல்கள் அடிமையா என முடிவு செய்யும் நேரம் இது..!

TRAI-ன் புதிய அறிவிப்பின்படி, கேபிள் டிவி, DTH, இன்டர்நெட் டிவி என அனைத்திலும் உங்களுக்கு தேவையான சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.

👂கேட்கும்போதே உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.🤩😇ஆகா, அருமை என்று...

ஆனால், இந்த அறிவிப்பின் முழு விவரத்தை கேட்டால் அட போங்கடா, நீங்களும் உங்கள் அறிவிப்பும் என்று சொல்லத் தோன்றும்..!

இதோ விவரம்...👇

இதன்படி உங்களுக்கு 100 சேனல்கள் இலவசமாக கிடைக்கும்.

நீங்கள் இலவச 100 சேனல்கள் போதும் என்றாலும்,
அடிப்படை கட்டணம் என்று ஒன்று மாதாமாதம் செலுத்த வேண்டும்.

அதாவது, அதற்கு பெயர் நெட்வொர்க் கெபாசிட்டி சார்ஜ்.

விலை: ₹153.40 (18% GST உட்பட)

இது கிட்டத்தட்ட நாம் இப்பொழுது செலுத்திக் கொண்டிருக்கும் கட்டணத்தின் அளவு.

ஆனால், இதில் இலவசம்+கட்டணம் என அனைத்து சேனல்களுக்கும் கிடைக்கிறது.

ஆனால், தற்பொழுது இந்த ₹153.60 க்கு அவர்கள் கொடுக்கும் 100 இலவச சேனல்களில் நமக்கு கிடைக்கும் தமிழ் சேனல்கள் இவை:👇

1.ஏஞ்சல்
2.கேப்டன்
3.பொதிகை
4.இசையருவி
5.கலைஞர்
6.கலைஞர் செய்திகள்
7.மக்கள்
8.முரசு
9.நியூஸ்7
10.பாலிமர்
11.தந்தி
12.புதிய தலைமுறை
13.புது யுகம்
14.சிரிப்பொலி
15.சங்கரா டிவி
16.வசந்த் டிவி
+ பிற மொழி சேனல்கள்

எனக்கு இந்த சேனல்களே போதும் என்றால், அவர்கள் உங்களுக்கு அடிமை...

இது எனக்கு பத்தாது என்றால், நீங்கள் அவர்களுக்கு அடிமை..!

இதற்கு மேல் நீங்கள் சேனல்கள் விரும்பினால், உங்களை போதையில் மயக்கி வைத்திருக்கும் அந்த சேனல்கள் எல்லாம் இப்போது கட்டண சேனல்களாக மாறி விட்டன..!
(ஒரு நாளைக்கு கோடிகளில் புரளும் அவர்களுக்கு விளம்பரதாரர்கள் மூலம் வரும் வருமானம் போதவில்லை. எனவே, நீங்களும் பணம் தந்து உதவ வேண்டும்)

இவர்களை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால், (கொஞ்சம் கஷ்டம்தான்) அவர்களும் இலவச சேனல்களாக மாற்றியே ஆக வேண்டும்..!

இல்லையென்றால், நீங்கள்தான் அவர்களின் அடிமை..!

முடிவு உங்களிடம்...✊

பகிர்வோம் அனைவருக்கும்👉

Sunday, 23 December 2018

அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல செய்தி...

*அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் கேஸ், பெட்ரோல்,டீசல் போன்ற* *எரிபொருளுக்கு மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை உலக அளவில் சரிந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் கனடாவில் கனடா குரூட்ஆயில் பேரல் 44 டாலரில் இருந்து 14 டாலராகவும்,* *அமெரிக்காவின் குரூட்ஆயில் பேரல் 77 டாலரில் இருந்து 51 டாலராகவும்* *குறைந்துகொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உலக பொருளாதார சரிவு என்று ஊடகங்கள் எழுதுகிறது. ஆனால் உண்மையான காரணம் அதுமட்டுமல்ல. இதற்கு காரணம் உலகை புரட்டிப் போடப்போகும் ஒரு கண்டுபிடிப்பாகும். அது என்னவென்றால்  நாம் அன்றாடம் உபயோகிக்கும் சிறிய பென்டார்ச்* *பேட்டரிதான். புதிதாக மாற்றம் செய்யப்பட இந்த பேட்டரிக்கு லித்தியம் ஜயான் பேட்டரி என்று பெயர். இதில் நாம் இதுவரை அடைத்ததைப் போல் பல மடங்கு மின்சக்தியை அடைக்க முடியும் அது மட்டுமல்லாமல் அரைமணி நேரத்தில் உபயோகித்த சக்தியை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த பேட்டரியின் லைப் என்கிற ஆயுட்காலம் 25 வருடம்.*

*உலகம் முழுவதும் இந்த பேட்டரியை உபயோகித்து கார்களையும் ஸ்கூட்டர்களையும் லாரிகளையும் இயக்க ஆரம்பித்து விட்டார்கள். அமெரிக்காவில் இலான்மஸ்க் என்கிற ஒரு மேதை டெஸ்லா என்கிற கார் கம்பெனியை ஆரம்பித்து உலகத் தரம் வாய்ந்த எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார். Tesla model 3, model s  என்று பெயரிடப்பட்ட இந்த கார்கள் ஒரே நேர சார்ஜில் 600 கிலோமீட்டர் செல்கிறது. இதன் மணிக்கு வேகம் 800 கிலோமீட்டரும் ஆக்சிலரேசன் 0-60 கிலோமீட்டர் 4 செக்கண்டிலும் செல்கிறது. இதன் விலை அமெரிக்காவில் டீசல் கார் விலையை விட குறைவு அதாவது 35000 டாலர்.*

*இந்தக் கார்  இந்த வருடத்தில் சுமார் 2 லட்சம் விற்றுத் தீர்ந்து விட்டது. இதனால் காத்திருப்போர் பட்டியல் 3 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த கார்களை வீட்டிலேயே சாரஜ் செய்து கொள்ளலாம். பெட்ரோல் போட வேண்டாம் 25  வருடங்கள் பேட்டரி மாற்ற வேண்டாம். இந்த வருடத்தில் இதுவரை உலகமுழுவதும் 20 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. அடுத்த ஆண்டு 50 லட்சம் எலக்ட்ரிக் கார்களும் அதற்க்கு அடுத்த ஆண்டு 1கோடி கார்கள் விற்பனையாகும் என்று நிபுணர்கள் எண்ணுகிறார்கள். மக்கள் இனிமேல் பெட்ரோல் டீசல் கார்களை வாங்க மாட்டார்கள். இதுதான் குரூட் ஆயில் விலை சரிவிற்க்கு காரணம். இன்னும் 10 வருடத்திற்குள் கேஸ், பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருட்கள் விலை மதிப்பற்று கூவி கூவி விற்கும் நிலைக்கு தள்ளப்படும்.*

*கடைசியாக ஒரு தகவல் பெட்ரோல் எஞ்சினில் மொத்த மூவிங் பாகங்கள் 2000 ஆனால் எலக்ட்ரிக் காரில் 18 பாகங்கள் மட்டுமே இருப்பதால் எளிதில் பழுதடையாது அப்படி பழுதடைந்தால் நாமே சரி செய்து கொள்ளலாம்.*
*நம் ஊருக்கு எலக்ரிக் கார்களும் ஸ்கூட்டர் பைக்களும் வருகிற ஆண்டு அதாவது 2019 ஆண்டில் விற்பனைக்கு வருகிறது.*

*யாவரும் அறிய இச்செய்தியை நாம் பகிர்வோம்...*

Trees Name in English - By All Is Well

Friday, 21 December 2018

DTH Channals Price list | New DTH Connection @rs.749 - Call 7010637030

ஜெயித்தவர்களிடம்* *அப்படி* *என்னதான்* *இருக்கிறது*?

*ஜெயித்தவர்களிடம்* *அப்படி* *என்னதான்* *இருக்கிறது*?
🏃🏽‍♂🥉🏃🏽‍♂🏅🏃🏽‍♂🎖🏃🏽‍♂🥇🏃🏽‍♂🥉
💪 சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.
💪 வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.
💪 வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.
💪 அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.
💪 அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.
💪 வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.
💪 வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.
💪 உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.
💪 தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.
💪 அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.
💪 தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது.
💪 தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது.
💪 சூழ்நிலைக்குத் தகுந்தப்படி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது.
💪 விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது.
💪 அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது.
💪 குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது.
💪 கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது.
💪 நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது.
💪 அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது.
🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎

Saturday, 15 December 2018

Any genius...

Any genius...❓

Question :-
🚴‍♀+🎾+🍌+🐒= Tamil movie name

1 day time 🕰🕰

Thursday, 6 December 2018

Life Story #23

கதை..

துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்..

பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்..

இளைஞன் ஒருவன் வந்தான் *_சாமி எனக்கு ஒரு சந்தேகம்.._* *உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்..*
*_ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான்.. உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்..??_* என்று கேட்டான்..

துறவி  அவனிடம் சொன்னார்..
*தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய்..*

_*ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை..*_
*_நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும்.._*

*தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு* _என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.._

_மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.._

_அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.._

_இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.._

_அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி.._
*தினமும் நீ சுத்தப் படுத்தினாலும்.. இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே.. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்..??* என்று கேட்டார்..

_அதற்கு அவன்,_
*என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்க ரீங்க..?*

_*திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா..?*_

_இதை கேட்ட துறவி  அப்போது சொன்னார்_ *தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில்..*

*நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன், அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழி படுத்தும்  செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்..*

இளைஞன் கேட்டான்.. *சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன..?*

_அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார்,_

_பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்.._
*இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா..?*

*ஆகாது சாமி..* என்றான்..

துறவி  கூறினார்.. *உன் கேள்விக்கு இதான் பதில்..*

*நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்..*

*இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல்..* _*என்று மனிதன் தன்னிடம்  இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ,*_  *அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும்,* *_அன்று வரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார்..!_*


Wednesday, 5 December 2018

Life Story #22



_ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார்.._
_அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.._

_ஒரு நாள் வேட்டைக்கு சென்ற அரசன் காட்டிலேயே தூங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.._

_அன்று காலை கண் விழிக்கும் போது சூரியோதயத்துக்கு பதில் அவ்வழியே சென்ற பிச்சைகாரர்  முகத்தில் விழித்துவிட்டார்.._

_கோபத்தோடு ஊர் திரும்பிய அரசன்.._ _குதிரையிலிருந்து இறங்கும்போது தடுமாறி விழுந்தார்.._ _அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது.._

*_அரசன் கடுப்பாகி பிச்சைகாரரை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.._*

_பிச்சைகாரன் கலங்கவில்லை_ *கல கல* வென _சிரிக்க தொடங்கினான்.._

*_அரசருக்கு மேலும் கோபம்.._* *_மற்றவர்களுக்கு திகைப்பு.._*

_பிச்சைக்காரன் சொன்னான்.._ *என் முகத்தில் நீங்கள் விழித்ததால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே..*
*உங்கள் முகத்தில் நான்  முழித்ததால் என் உயிரே போக போகிறதே.. அதை எண்ணி சிரித்தேன்..*

_அரசன் தன தவறு உணர்ந்து தலை குனிந்தான்.._ _தண்டனையை ரத்து செய்யப்பட்டது.._


👇
*தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்..*

*அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்..*

Sunday, 2 December 2018

Life Story #21

ஒரு ராஜா அவரோட தளபதிக்கு வயசாயிடுச்சுனு, வேற ஒரு தளபதிய நியமிக்க முடிவு செஞ்சாரு..

இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தாங்க..

ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி,
”இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு.. அதோட கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது.. இதுவரைக்கும் யாராலயும் அதை திறக்க முடியலை..”
அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் ராஜா பேசினாரு..

இதுக்கு முன்னாடி பெரிய வீரர்கள் எல்லாம் இருந்திருப்பாங்க, அவங்களாலயே திறக்க முடியல! நம்மால எப்பிடி முடியும்னு சிலர் கிளம்பிட்டாங்க..

கூட்டம் 10
பேரா குறைஞ்சுடுச்சு..!

ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார்..

எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுகிட்டுருந்தாங்க!!

இந்த கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது  என ராஜா எல்லாரிடமும் கூறினார்..

கதவை பார்த்த பலர்.. எப்படி திறப்பது என்று தயங்கினர்..!

ஒருத்தன் மட்டும் கதவு அருகில் போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான்..
அட! என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு..!

பல பேர் தயங்குவதனாலும், ராஜா சொல்வதனாலும் முயற்சி செய்யாமல் இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்..!
என்ற
ராஜா,
அவனை பாராட்டி தளபதி பதவியை அவனுக்கு வழங்கினார்..


👇
“அது முடியாத காரியம்..” என எப்போது நம் காதுகளில் யாராவது சொல்லி விழுகிறதோ அப்போதே புரிந்து கொள்ளவேண்டும், நாம் சாதிப்பதற்க்கு அருகில் வந்துவிட்டோம் என்று..

Saturday, 1 December 2018

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்...

😊👍😊👍😊👍

*உடம்பின் நடுப்பகுதி வயிறு.*

*அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.*

*இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,*
*நீங்கள் எப்படி இருப்பீர்களோ,* *அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.*

😊
*தொந்தி கனக்க விடாதீர்கள்.*
*தொந்தரவு வரும்.*
*மனம் கனக்க* *விடாதீர்கள்*
*மரணம் வரும்.*

😊
*ஒரு மனிதன்*
*வியாதியுடன்* *வாழப்போகிறானா,*
*வீரியமுடன் வாழப்போகிறானா,*
*நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா* *என்பதைத் தீர்மானிக்கும்* *வயதுதான்*
*இந்த நாற்பது.*

😊
*நிறைய வேலை செய்வதால்*
*நமக்கு நிம்மதி போவதில்லை.*
*உடம்பு உருக்குலைவதில்லை.*

😊
*என்ன நடக்குமோ என்ற*
*பயமும் கவலையும்தான்*
*மனிதன்மீது பாரமாக இறங்கி*
*அவனை நொறுக்கிவிடுகின்றன.*

😊
*பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.*
*கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.*
*நிதானத்தைக் கடைபிடியுங்கள்.*
*ஆரவாரம் வேண்டாம்.*
*அலட்டிக் கொள்ளாதீர்கள்.*
*பொறுப்புக்களை*
*சீராக நிறைவேற்றுங்கள்.*

😊
*அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.*
*அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.*

😊
*தினசரி* *மத்தியானம்*
*ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.*
*இரவு பன்னிரண்டு மணிக்குமேல்*
*எக்காரணத்தை முன்னிட்டும்*
*விழித்திருக்காதீர்கள்.*

😊
*பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.*
*அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.*

😊
*மனம் தளராமல் தினந்தோறும் ஆண்டவனை நினையுங்கள்.*
*இறைவா இன்று முழுக்கவும் என்னுடன் இருந்து என்னை ஆட்கொள் அபபனே.*
*என்னை எந்த தவறும்  செய்ய விடாதே அப்பனே."*
*என்று வேண்டிக் கொள்ளுங்கள்.*

😊
*ஒவ்வொரு நாளும் முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.*
*கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.*

😊
*டென்ஷன் இல்லாமல் இருங்கள்.*
*நூறு வயது வரை பென்ஷன் வாங்கலாம்.*

😊 *ஸ்ட்ரெஸ் உண்டாக்கிக் கொண்டால்,*
*அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.*

😊
*அதனால்தான் சொல்லுகிறேன்.*
*கவலையைக் *கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று !*
*முடிந்தால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஒருபோதும் கெடுதல் நினைக்காதீர்கள்*

*மரணம் நம்மை கண்டு ஓடவேண்டும், மரணத்தை கண்டு நாம் ஓடக்கூடாது*

*வாழ்க வளமுடன்*
*வேண்டும் சுபம்*

*நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்*

*
🙏🙏🙏

Life Story #20

#நம்பிக்கை__வை!!!!!🙏🙏

💥ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள்.

⚡அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.
கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார்.

💥"அர்ஜுனா,அது புறா தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
" ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!" என்றான் அர்ஜுனன்.

💥சில விநாடிகளுக்குப் பிறகு,
"பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!" என்றார் கிருஷ்ணர்.

⚡அடுத்த விநாடியே,"ஆமாம்.....ஆமாம் ...அது பருந்து தான்.!"
என்று சொன்னான் அர்ஜுனன்.

💥மேலும் சில விநாடிகள் கழித்து
"அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.!"
கிருஷ்ணர் சொல்ல,

⚡கொஞ்சமும் தாமதிக்காமல் ," தாங்கள் சொல்வது சரிதான்...அது கிளி தான் .!" என பதிலளித்தான் அர்ஜுனன்.

💥இன்னும் கொஞ்சம் நேரமானதும்,
"அர்ஜுனா,முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.

அது ஒரு காகம்.!" கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்.

⚡"நிஜம் தான் கிருஷ்ணா...அது
காகமே தான்...சந்தேகமே இல்லை.!"
பதிலளித்தான் அர்ஜுனன்.

💥" என்ன நீ ,நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.! உனக்கென்று எதுவும் யோசிக்கத்
தெரியாதா.?"
கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.

⚡"கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச்
சொன்னால் ,அது பருந்தோ,காகமோ,
புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.

அதனால் நீ என்ன சொல்கிறாயோ,அப்படித் தானே அது இருக்க முடியும்.
தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்.?" அமைதியாகச் சொன்னான் ,அர்ஜுனன்.

🌹இந்த நம்பிக்கை தான் பகவானை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.

Moral . . .

🌺கடவுள் மேல் சந்தேகம் இல்லாமல் ,நம்பிக்கை வையுங்கள்.
அவர் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும் என்பதை உணருங்கள்.
உங்கள் சங்கடங்களைப் போக்கவும்,சந்தோஷத்தை நிலைக்க வைக்கவும்
கடவுளால் மட்டுமே முடியும் என்பதை உணருங்கள்...

👌இந்தத் தத்துவத்தை நீங்களும், நானும் புரிந்து நடந்து கொண்டோமென்றால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் நமக்கு இனிய நாள்தான்!....

Friday, 30 November 2018

Life Story #19

சமாளிக்க முடியாமல் திணறினார்
அந்த இளம் பெண் !

அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !

கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள்..!

அந்த பெண்ணின் பெயர்  ஸ்ருதி. வயது 24.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார்..!

கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு..

அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட  கேள்வி...

“இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள்? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?”

ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை..

பின் அமைதியாக சொன்னார்...

“இல்லை. என் குடும்பம் மிக மிக  எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!”

நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்..

“ மேடம் ..உங்கள் குடும்பம்... அம்மா அப்பா பற்றி சொல்லுங்களேன்..?”

ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .

ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ..?

“மேடம் .. நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”

“ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?”

“உங்கள் அப்பா, அம்மா...?”

ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார் .

“ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..? ப்ளீஸ் ”

நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்..

“எங்கே  மேடம்..? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”

ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்...

“என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்..”

“ஓஹோ”- நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள்.

ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்..

“என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான்   இருக்கிறார் !”

நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !

ஒரு நிருபர் கேட்டார்.

“ஓ ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”

“இல்லை..”

இன்னொரு நிருபர் கேட்டார்.. “சீனியர் வக்கீலா ..?”

“இல்லை..”

வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி, கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில்  ஒதுங்கி நின்றார் .

நிருபர்களைப் பார்த்து கேட்டார்..

“நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”

நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க ... சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார் .

அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க ... ஸ்ருதி தன் கையாலேயே அதை  வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க ...
டீயை குடித்து முடித்த நிருபர்கள் “ மேடம் .. நாம் போகலாமா..?”

ஸ்ருதி நிருபர்களை நோக்கி கேட்டார்..

“எங்கே..?”

நிருபர்கள் சற்றே குழம்பி ..

“மேடம் ..உங்கள் அப்பாவை எங்களுக்கு  அறிமுகப்படுத்தி வைப்பதாக ....”

ஸ்ருதி புன்னகைத்தார்..

“ஓ...ஆமாம் ..அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா..?.....ஓகே ...போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்”

-என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் :

“அப்பா ..இங்கே கொஞ்சம் வாங்க !”

திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !

ஸ்ருதி அந்த டீ விற்பவரின்  அருகில் நின்று கொண்டு, நிருபர்களை நோக்கி பெருமையாக சொன்னார்..

“இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான்  எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான்  டீ விற்பனை செய்கிறார்.  இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ்ஆக இருக்கிறேன்.”

நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள்...

ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார்..

“ஓகே..  என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும்.  நான் வரட்டுமா?”

ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே”

நன்றி: Deccan Herald & india times |

Thursday, 29 November 2018

Life Story #18

*தினம் ஒரு கதை..*


_அது ஓர் அழகிய நகரம்.._
_அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார்.._
_ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான்.._
_அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம்_ *ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?* என்று கேட்டான்..

அதற்குக் காவலாளி *ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?* என்று சந்தேகத்துடன் கேட்டார்..

*ஆமாம் பெரியவரே.. நான், முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம்.. எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க.. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும், திட்டிக்கிட்டும்.. எப்படா, அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது.. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?* என்று கேட்டான்..

*நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம்.. போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும்.. நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி* _என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார்.._

_சிறிது நேரம் கழித்து,_

_அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியை வேறுமாதிரி கேட்டான்.._
*ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன்.. இந்த ஊர் மக்கள் எப்படி?* என்று..

_பெரியவர் சிரித்துக்கொண்டே.._ *ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?* என்று கேட்டார்..

*ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா* என்றான்..

*அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல?* என்றார் காவலர்..

*எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க.. எனது குடும்பம் இப்போது சிறிது வறுமையில இருக்கிறது.. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன்.. நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்..* என்றும்.. _கண் கலங்கியபடியே கூறினான்.._

*அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க.. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்* _என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.._

_காவலாளியின் அருகில் இருந்த ஒருவர், இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.._

உடனே அவரிடம் *முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?* என்று சந்தேகத்துடன் கேட்டார்..

அதற்குப் பெரியவர்  *இந்த உலகம் கண்ணாடி மாதிரி.. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'..* என்றார்..


👇
இயற்கை (உலகம்) நிலையானது..
*நாம் என்ன கொடுக்கிறோமோ.. அதைத்தான் நமக்கு திரும்ப தரும்..*

'2.0' திரை விமர்சனம், 2.0 Review Ratings 8.5/10

'2.0' திரை விமர்சனம்

ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், லைகா போன்ற பிரபலங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த படம் என்றால் பிரமாண்டத்திற்கு பஞ்சம் இல்லா படமாக  இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் 2.0 உள்ளது. வெறுமே கிராபிக்ஸ் காட்சிகளை மட்டுமே இன்றி இன்றைய உலகிற்கு தேவையான கருத்தை மனதில் பதியும் வகையில் இப்படத்தை ஷங்கர் கொடுத்துள்ளார்.

செல்போன்களை மனிதர்கள் பயன்படுத்த தொடங்கிய பின்னர் அதிலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் போட்டிகளால் அளவுக்கு அதிகமான ரேடியேஷன்களால் பறவை இனமே அழியும் ஆபத்து உள்ளது. இந்த உண்மையை புரிந்து கொண்ட அக்சய் குமார் செல்போன்கள் பயன்படுத்துவதை குறைக்க போராடுகிறார். இதற்காக அரசிடம், மக்களிடமும் நீதிமன்றத்திலும் கோரிக்கை வைக்கிறார். ஆனால் அவருக்கு  அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் மனமுடைந்து செல்போன் டவரிலேயே தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின் பறவைகளின் ஆன்மாக்களுடன் தன்னுடைய ஆன்மாவை இணைத்து ஐந்தாம் சக்தியை உருவாக்கி அந்த சக்தி உதவியால் செல்போன்களுக்கு எதிராக அவர் தொடுக்கும் போரும், அந்த போரில் இருந்து மனிதர்களை காப்பாற்ற சிட்டியை தட்டி எழுப்பும் ரஜினிக்கும் இடையே நடக்கும் டெக்னாலஜி போர் தான் 2.0 கதை

இதுவரை வெளிப்படுத்தாத நடிப்பை தனது ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற மெனக்கெடல் ரஜினியின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. வசீகரன் கேரக்டர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், சிட்டி, ரோபோ வெர்ஷன் 2.0 கேரக்டர்களில் ரஜினி தனது நடிப்பை வெளுத்து வாங்கியுள்ளார். இறுதியில் சஸ்பென்ஸ் ஆக வரும் 3.0 ரஜினி, ரசிகர்களுக்கு கிடைத்த கூடுதல் போனஸ்

நாயகியை கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தாமல் கதைக்கும் சேர்த்தும் பயன்படுத்தும் இயக்குநர் ஷங்கர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் வசீகரனுக்கும், சிட்டிக்கும், 2.0 ரோபோவுக்கும் உதவி செய்யும் ரோபோ கேரக்டரில் எமிஜாக்சன் நடித்துள்ளார். ரோபோவுக்கும் காதல் வரும் என்ற உணர்வை அவர் வெளிப்படுத்திய விதம் சூப்பர்.

அக்சயகுமார் நடிப்பில் மிரட்டுகிறார். இடைவேளைக்கு பின்னர்தான் அக்சய் அறிமுகமாகிறார் என்றாலும், இரண்டாம் பாதியில் அவருடைய கேரக்டர் எடுத்துக்கொள்ளும் பங்கு மிக அதிகம். வயதான பறவைகளின் விஞ்ஞானி கேரக்டரில் நமது நெஞ்சை தொடும் அக்சய், அதன் பின் ராஜாளியாக மாறி செய்யும் அட்டகாசங்கள் சூப்பர்.

எந்திரன்' பட வில்லன் டேனியின் மகன் கேரக்டரில் நடித்திருக்கும் சுதன்ஷூ பாண்டேவுக்கு அதிக காட்சிகள் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியின் திருப்புமுனைக்கு காரணமான கேரக்டர் என்பதால் ரசிக்க முடிகிறது. அதேபோல் உள்துறை அமைச்சர் கேரக்டரில் நடித்திருக்கும் அதில்ஹுசைன் நடிப்பும் ஓகே

ஏ.ஆர்.ரஹ்மானின் உலகத்தர பின்னணி இசை இபபடத்தை தூக்கி நிறுத்துகிறது. அக்சயகுமாருக்கும், 2.0 ரோபோ ரஜினிக்கும் அவர் கம்போஸ் செய்துள்ள தீம் மியூசிக் இன்னும் காதுக்குள்ளே இருக்கிறது. இரண்டு பாடல்களும் படத்தின் காட்சிகளோடு வருவதால் பாடல்களால் படத்தின் விறுவிறுப்பு குறையவில்லை. நல்லவேளையாக 'இந்திரலோகத்து சுந்தரி' பாடலை படத்தின் இறுதியில் வைத்துள்ளனர்.

நீரவ்ஷாவின் கேமிராவும், அந்தோணியின் படத்தொகுப்பும் பாராட்டும் வகையில் உள்ளது. இருவருமே தங்களுடைய அதிகபட்ச உழைப்பை கொடுத்துள்ளனர்.

ஷங்கரால் இப்படி கூட கற்பனை செய்ய முடியுமா? என்ற அளவுக்கு உள்ளது ஒவ்வொரு காட்சியும். திடீர் திடீரென செல்போன்கள் பறப்பது, செல்போன்கள் சாலையில் ஊர்ந்து வருவது, ராணுவத்தால் கூட முறியடிக்க முடியாத செல்போனின் அட்டகாசங்கள், கிளைமாக்ஸில் கால்பந்தாட்ட மைதானத்தில் ரஜினி-அக்சய் மோதும் காட்சிகள் ஷங்கரின் உச்சகட்ட கற்பனை. மேலும் கற்பனையை விஷூவலாக காட்ட அவர் எடுத்திருக்கும் முயற்சிகள் அபரீதமானவை. ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கிட்டு ரசிகர்களுக்கு அனைத்து காட்சிகளையும் பெஸ்ட் ஆக கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.

இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்கு மட்டுமல்ல. பறவைகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உரியது குறிப்பாக மனித இனம் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் பறவைகள் நிச்சயம் வாழ வேண்டும் என்ற உண்மையை மிக ஆழமாக கூறியுள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜெயமோகனின் வசனம் அமைந்துள்ளது சிறப்பு

மொத்தத்தில் வெறும் டெக்னாலஜி, கிராபிக்ஸ் காட்சிகளை மட்டும் நம்பாமல் ரஜினியை சரியான வகையில் உபயோகித்தது, அழுத்தமான கருத்துடன் கூடிய திரைக்கதை அமைத்தது, பிரமாண்டமான 3டி காட்சிகள் என ஷங்கரின் பிரமாண்டமான விஷூவல் விருந்துக்காக அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான் '2.0

Tuesday, 27 November 2018

Life Story #18

_தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார்.._

_அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.._

_தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார்.._
_அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால்.. பல துண்டுகளாக வெட்டினார்.._

_பின்னர் கத்திரிக்கோலை.. தன் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார்.._

_துணியை தைத்து முடிந்ததும், ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார்.._

_இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம்,_ *“அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது.. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள்.. ஊசி சிறியது.. மலிவானது.. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே.. அது ஏன்..?”* என்று கேட்டான்..

*“ நீ சொல்வது உண்மைதான்”*

*கத்திரிகோல் அழகாகவும்.. மதிப்புள்ளதாகவும் இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது.. அதாவது பிரிப்பது!*

*ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது..*
என்றார் தையற்காரர்..


👇
_*ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக்கொண்டே, நிர்ணயிக்கப்படவேண்டும்..*_

_*அவர் உருவத்தை வைத்து அல்ல..*_

#469 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1326 சுழலும் இசைவேண்டி | Daily one ...

#468 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 777 காக்கை கரவா | Daily one thirukk...

Monday, 26 November 2018

Life Story #17



_ஒரு குருகுலத்தில் பல சீடர்கள் இருந்தனர்.. அனைவரும் ஆர்வமாக எல்லாவற்றையும் கற்றுவர, ஒரு சீடன் மட்டும் கவலையோடு இருந்தான்.. துறவி அவனை அழைத்து விசாரித்தார்.._
_*குருவே! எல்லோரும் என்னை கிண்டல், கேலி செய்கின்றனர்.. தாங்க முடியவில்லை.. கோபம் தலைக்கேறுகிறது.. என்ன செய்வதென்றே தெரியவில்லை!*_ என்றான்..

_*இந்தக் கிணற்றின் கைப்பிடி சுவர் மீது ஏறி பத்துமுறை சுற்றிவா!*_ என்றார் குரு.

_குரு எதற்காக அப்படிச் சொல்கிறார் எனத் தெரியாவிட்டாலும், குருவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கவனமாக கிணற்றுச்சுவரில், ஏறி, சிரத்தையுடன் பத்துமுறை வலம் வந்தான் சீடன்.._

_*நீ கிணற்றுச் சுவரில் ஏறி நடந்தபோதுகூட உன்னை பலர் கிண்டல் செய்தார்களே, அதைக் கேட்டாயா?*_ என்றார் குரு..

_*இல்லை குருவே! கிணற்றிற்குள் விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால்.. யார் பேசியதும் எனக்கு கேட்கவில்லை*_ என்றான் சீடன்..

குரு சொன்னார், *_ஒரு செயலில் மிக கவனமாக, உண்மையாக நாம் ஈடுபட்டிருக்கும்போது, பிறர் சொல்லும் வார்த்தை நமக்கு கேட்காது, புரிகிறதா?_* என்றார்..

*சீடனுக்கு எல்லாம் புரிந்தது!*
🐝

👇
*இவன் என்ன சொல்கிறான், அவன் என்ன சொல்கிறான், என்பதை கவனித்துக்கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பவனால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது*
-சுவாமி விவேகானந்தர்

Sunday, 25 November 2018

#467 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 527 இயல்பாகும் நோன்பிற்கொன் | Daily...

Life Story #16


_ஒரு ஊரில் ஒரு வணிக செல்வந்தன் இருந்தான்.. அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.._

_அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான்.._

_அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர்.. ஆனால் இவன் விற்கவில்லை.._

_இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.._
_ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.._

_தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை.._

_வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.._ *ஐயோ என் வீடு ! என் வீடு !* என்று அலறினான்..

_அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து.._ *தந்தையே ஏன் வருந்துகிறீர்கள் ?*

_*இந்த வீட்டை நாங்கள் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டோம்..*_

_*இதனால் நமக்கு நஷ்டம் இல்லை*_ என்று கூறினான்..

_இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.._

_அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.._

_இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.._

*"அதே வீடு தான்"..*

*"அதே நெருப்பு தான்"..*

_ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும், சோகமும் இப்போது அவனிடம் இல்லை.._

_சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து_ *தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்?*

_*நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம்..*_

*முழு தொகை இன்னும் வரவில்லை..*

*_வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே_* என்றான்..

_இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான்.._

_மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான்.._

_கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்.._

_தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.._

_சில மணித்துளிகள்.. வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.._ *தந்தையே கவலை வேண்டாம்.. இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன்..*

*_இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது.. வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது.. எனக்கும் தெரியாது.._*

_*ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம்..*_ என்று *என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்* என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்..

_இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.._
*கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான்..*

_கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது.._

_மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.._

_இங்கு எதுவுமே மாறவில்லை_
*அதே வீடு..*
*அதே நெருப்பு..*
*அதே இழப்பு..*
🐝

👇
 *இது என்னுடையது என்று நினைக்கும்போது அந்த இழப்பு நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறது..*

*இது என்னுடையது அல்ல என்று நினைக்கும்போது  சோகம் நம்மை தாக்குவது இல்லை..*

_*உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை..*_

இதைத்தான் அனைத்து மதமும்   போதிக்கிறது..

எதை நீ இழந்தாய்..
எதற்காக அழுகிறாய்..
இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது..
மாற்றம் என்பது மட்டுமே மாறாதது..
கடமையை செய்..
பலனை எதிர்பாராதே..
ஏனெனில் கடமைக்கான பலனை  இறைவன் தர மறப்பதில்லை..

Friday, 23 November 2018

#465 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 344 இயல்பாகும் நோன்பிற்கொன் | Daily...

Life Story #14

*தினம் ஒரு கதை..*

*மவுரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்தனின் குரு சாணக்கியர். இவரது அர்த்த சாஸ்திரம் அரசியல் பொக்கிஷம்!*

அவர் ஒருநாள் அரசவையில், *மன்னா ஏழை மக்கள் கடும் குளிரால் வாடுகிறார்கள்.. அவர்களுக்கு இலவச கம்பளி கொடுத்து உதவ டேண்டும்!*  என்று வேண்டுகோள் விடுத்தார்..

அரசனும் அதை ஏற்று, கம்பளி வழங்கும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தான்..

*அரசாங்கச் செலவில் வாங்கப்பட்ட கம்பளிகள், ஏழைகளுக்கு விநியோகிக்க வசதியாக, சாணக்கியரது வீட்டில் அடுக்கப்பட்டன..*

இந்த விஷயம், *ஊர் எல்லையிலிருந்த கொள்ளையர்களுக்குத் தெரிய வந்தது..*

_அன்று இரவு, சாணக்கியரின் வீட்டுக்குச் சென்று கம்பளிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்வது என்று அவர்கள் முடிவு செய்தனர்.._

_திட்டப்படி அன்று இரவு சாணக்கியரின் வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தனர்.._

அங்கு, *அரதல்பழசான கிழிந்த போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார் சாணக்கியர்.. அருகில், அவரின் தாயாரும் அப்படியே!*
 _கொள்ளையர்களுக்கு ஆச்சரியம். திருட வந்ததையும் மறந்து சாணக்கியரை எழுப்பினர்.._

_கண் விழித்த சாணக்கியர் ஆச்சர்யமுற்றார்.._

எதிரே நின்றிருந்த திருடர்களில் ஒருவன், *ஐயா.. நாங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் கம்பளிகளைத் திருடவே வந்தோம்.. இங்கு புதிய கம்பளிகள் இவ்வளவு இருந்தும், நீங்களும் உங்கள் தாயாரும் கிழிந்த போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கிறீர்களே? புதிய கம்பளிகளில் இரண்டை உங்களது தேவைக்காக எடுத்திருக்கலாமே?* என்று கேட்டான்..

அதற்கு சாணக்கியர், *அவை, ஏழை-எளியோருக்கு வழங்கப்பட இருக்கும் அரசாங்கப் பொருட்கள்.. அதை எப்படி நான் உபயோகிக்க முடியும்? மன்னன் என் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்னாவது?* என்றார்.

_அதைக் கேட்டதும் சாணக்கியரின் கால்களில் விழுந்த திருடர்கள், தங்களை மன்னிக்க வேண்டினர்.._
*இனி, வாழ்நாளில் நாங்கள் திருடவே மாட்டோம்..* என்று அவர் முன் சத்தியமும் செய்தனர்..


👇
_சாணக்கியர், இன்றளவும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால், அதற்குக் காரணம்.. அவரது அரசியல் தந்திரங்கள் மட்டுமல்ல; தன்னலமற்ற அவரது தூய்மையான வாழ்வும்தான்!_

Life Story #15

*தினம் ஒரு கதை..*

எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது..
அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!

அவள் மானுடப் பெண் என்றாலும்,

அவளை மணந்து, அவளுடன் வாழவேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது..

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பன் ஆனார் எமதர்மன்..

அவர் மணந்த பெண் நல்லவள் தான்..
என்றாலும் நாளாக, நாளாக எமனுக்கு அவ்வாழ்க்கை மீது சலிப்பு தட்டியது..

மேல்உலகம் சென்று விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார்..

மனைவியை பிரிந்து செல்ல முடிவு செய்தார்..

ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால்,

மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை.. தத்தளித்தார்..

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்..

மகனே..
நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்..

மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்..

எப்படித் தெரியுமா..?

ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால், நான் அங்கு இருப்பேன்..

உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்..

நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே..

நீ வைத்தியம் செய்து, அவர் இறந்து போனால்.. உன் புகழ் குறையும்..

எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும்.. நான் அங்கு இல்லையென்றால்,
தைரியமாக மருந்து கொடு..

அவன் பிழைத்து, எழுந்து கொள்வான்..

அதனால் உன் புகழ் மேலும், மேலும் பரவும் என்றார் எமன்..

மகனை அணைத்து கண்ணீர் விட்ட எமதர்மன், மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல்,
இவ்வுலகை விட்டு நழுவி விட்டார்..

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான்..

அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்..

ஒருவர் கூடச் சாகவில்லை.. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்..

யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது,

எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்..

இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது..

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள்..

யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை..

இவனை அழைத்தார்கள்.. என் மகளைக் காப்பாற்றினால் ,

அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன்,

ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா..

அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி..

எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார்..

வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்..

ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி,

ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்..

இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்..

எப்படி அவரை விரட்டுவது..?

பளிச்சென்று யோசனை பிறந்தது..

வாசல் பக்கம் பார்த்து கத்தினான்..

அம்மா....!!
அப்பா உள்ளே இருக்கார்..

ரொம்ப நாளா அப்பாவைக் காணோம், காணோம்னு தேடினேயே..!

இங்க இருக்கார்..!
என்று அலறினான்..!

அவ்வளவுதான் துண்டைக் காணோம் ,
துணியைக் காணோம் என்று எமன் ஒரே ஓட்டமாக ஓடியேவிட்டார்..


👇
எமனாயிருந்தாலும்,
இல்லை எவனாயிருந்தாலும்..
நம்பியவர்களை ஏமாற்றியவரின் நிலை இதுதான்..
அவர்களை வாழ்க்கையில் எங்கு கண்டாலும் ஓடி ஒழிய  வேண்டிய நிலைதான் ஏற்படும்..


Life Story #13

 *தினம் ஒரு கதை..*
_ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி புனிதநூலை படித்துக்கொண்டே இருப்பார்.. இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டே இருந்தான்.._

ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான் , "தாத்தா! எப்பப்பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே.. இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?" என்றான்..

பெரியவர் சொன்னார்,
*_"ஒரு அம்பது.. அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும்.."_*

*_"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க..?"_* என்றான்..

தாத்தா சிரித்தபடி கூறினார்,
*_"எனக்கு ஒரு உதவி செய்.. நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்.."_*

இளைஞன் கேட்டான்,
*_"என்ன உதவி தாத்தா..? "_*

_பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார்.. அதில் அடுப்புக் கரி இருந்தது.. அதை ஒரு மூலையில் கொட்டினார்.. பல நாட்களாகக் கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.._

பெரியவர் சொன்னார்,
_*" தம்பி.. அதோ இருக்குற குழாயில இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்.."*_

இளைஞனுக்கு சிரிப்பு வந்தது..
 *இருந்தாலும்.. பெரியவர் சொல்லி விட்டதால்.. எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான்.. அவன் வந்து சேருவதற்கு முன்பே, எல்லா நீரும் தரையில் ஒழுகிப்போனது..*

பெரியவர் சொன்னார்,
_*" இன்னும் ஒரு முறை.."*_

_இளைஞன் மீண்டும் முயன்றான்.._
_ஆனால் மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?_
மீண்டும் சிந்திப் போனது..

_பெரியவர் கேட்டார்,_
_*" தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும்.."*_

இளைஞன் ஒரு
முடிவுக்கு வந்தான்..
_*"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம்.. அவர் எந்தப் புத்தகத்தைப்படித்தால் எனக்கென்ன வந்தது..? "*_
_தண்ணீர் பிடித்தான்.. வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில்.._
_*"தாத்தா, இந்தாங்க உங்க கூடை.. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க"*_
என்றான்..

அவர் புன்னகையோடு சொன்னார்,
_*" இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும் தெரியும்.. நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது? "*_ என்றார்..

இளைஞன் சொன்னான் ,
_*"ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது.."*_

_*"இப்போ பார் "*_ என்றார்..

*தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது..*

பெரியவர் சொன்னார்,
_*"தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்.. எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை.. ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை சுத்தமாயிடிச்சு..*_

_*அது போலத்தான் எத்தனை முறை படிச்சாலும் முழு புனிதநூலையும் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது.. ஆனா படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும்.."*_ என்றார்..

Life Story #12

*தினம் ஒரு கதை..*

_இந்த அருமையான கதையை நமக்கு அனுப்பிய_ *சென்னையை சேர்ந்த சகோதரர் விக்னேஷ் குமார்* _அவர்களுக்கு_ *_நமது நன்றியினையும்.. அவரது குடும்பம் வாழ்வாங்கு வாழ இறைவனையும் அனைவரும் வேண்டுவோமாக.._*

இனி கதை..

_தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர்.._

_சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.._

_வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது..
*_ஒரு பெரிய கூஜா நிறைய காப்பியையும் .. மற்றும் பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி என பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார்.. கோப்பைகளில் சிலவகை விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும்.. சிலவகை சாதாரணமானதாகவும் என பலவிதங்களில் இருந்தன.._*

_பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை கோப்பைகளில் தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.._

_எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார்.._
 *நண்பர்களே கவனியுங்கள்..*
_*"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள்..*_

_*உங்கள் கைகளில் இருக்கும் கோப்பைகள் போக மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள்..*_ _*உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன..*_ _*அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள்.. அது தான் உங்கள் பிரச்சினைகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்.."*_
அனைவரும் புரிந்தும்புரியாமலும் பேராசிரியரை பார்த்துக்கொண்டிருந்தனர்..
தொடர்ந்து அவர்..
_*"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி மட்டுமே, கோப்பையல்ல.. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்.."*_

_*"இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள்.. இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள்.. இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது.."*_

_*"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைத்து காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்.."*_
அனைவரும் அவரின் கூற்றை உள்வாங்கி தங்களின் செயல்பாடு அவ்வாறு தான் உள்ளது என நன்கு உணர்ந்தனர்..


👇
_*"ஆகவே.. நண்பர்களே கோப்பையில் நமதூ கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை மட்டும் அனுபவிப்போம்.."*_


Life Story #11

*தினம் ஒரு கதை..*

_இந்த அருமையான கதையை நமக்கு அனுப்பிய_ *சென்னை, நங்கநல்லூரை சேர்ந்த சகோதரர் பத்ரி நாராயணன்* _அவர்களுக்கு_ *_நமது நன்றியினையும்.. அவரது குடும்பம் வாழ்வாங்கு வாழ இறைவனையும் அனைவரும் வேண்டுவோமாக.._*

இனி கதை..

ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு
வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர்..

இரவு நேரம்,
பெருத்த மழை வேறு..

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்..

வந்தவர் "நானும் இரவு இங்கே தங்கலாமா" என்று கேட்டார்..

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்..

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?
என்றார் வந்தவர்.

இருவரில் முன்னவர் சொன்னார்,

என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்..

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர்,

ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள்,

இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்..

 மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார்..

(தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை,

ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள்..

இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!

நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்..

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்..

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்..

பொழுது விடிந்தது, மழையும் நின்றது..

மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி,

என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து,

நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள்,
என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்..

மூன்று ரொட்டிகளை கொடுதவர்,

அந்த காசுகளை சமமாகப்பிரித்து,

ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்..

மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை.

மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்..

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார். (3: 5 )

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை,

என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும்,

நான் பங்கிட சம்மதித்தேன்..

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது..

அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது,
என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்..

சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது..

அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை..

நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றான்..

மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை..

வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது..

மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து,

தீர்ப்பும், விளக்கமும் தந்தார்..
கடவுள் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..

அடுத்த நாள் சபை கூடியது..

மன்னர் இருவரையும் அழைத்தார்..

மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும்,

ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்..

ஒரு காசு வழங்கப்பட்டவர், "மன்னா...!  இது அநியாயம்..
அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொன்டார்.." என்றார்..

அரசர் சொன்னார்..
நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள்..

அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது..

அவன் தந்தது பதினைந்து துண்டுகள்..

அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது..

ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி..

இதற்கு இதுவே அதிகம்..

அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்..

ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன் (1 : 7 ) என்றார்..


ஆம் ! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகதான் இருக்கும்..

நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு..

எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு..

இது கடவுளின் கணக்கு..

இது கடவுளின் ஏட்டு கணக்கு இல்லை..

தர்ம புண்ணிய கணக்கு..!

நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்..
முழுமையாக தன்னை சேவைக்கு அர்பணித்துக் கொண்டவர்களை இறைவன் அறிவான்..

Life Story #10

*தினம் ஒரு கதை..*

_இந்த அருமையான கதையை நமக்கு அனுப்பிய_ *கோவில்பட்டி-யை சேர்ந்த சகோதரர் இன்கார்ப் இரவி* _அவர்களுக்கு_ *_நமது நன்றியினையும்.. அவரது குடும்பம் வாழ்வாங்கு வாழ இறைவனையும் அனைவரும் வேண்டுவோமாக.._*

இனி கதை..

அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன்..
ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது..

காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்..

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை..

மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன..

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்..
யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை..

மன்னனால் தூங்க முடியவில்லை.. உணவும் குறைந்து விட்டது.. மன்னன் பொலிவு இழந்தான்..
மன்னனோடு சேர்ந்து நாடும் கலை இழந்தது..

இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி அங்கு வந்து சேர்ந்தார்..

மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்..

"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி.. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.."

இங்கிருந்து மூவாயிரம் மைல் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்..

இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன்.. எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்.. அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்.."

மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்..

மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது..

அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது..

 மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி..

மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.. நன்றாக உண்டான்.. பழைய பொலிவு திரும்பி விட்டது..

அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்..
அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்..

"குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''

''துறவி புன்னகை பூத்தார்"..

"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?'' மன்னனின் செவிக்குள்..
''அதுதான் இல்லை.. மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம்.. சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும்.. இல்லை, வெளியே வந்திருக்கும்..

அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டது.. அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது..

அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்."

"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே..?''


"மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது!

பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்..

அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்..

தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்."

''அந்த மூலிகை?''

"நம் ஊரில் சாதாரணமாக விளையும் தூதுவளைதான்..
அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்..

பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக் காட்டினேன்.. மன்னன் நம்பி விட்டான்.. அவன் நோயும் தீர்ந்தது.."



இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன..

காதில் நுழைந்த பூச்சி செத்து விட்டது.. மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது..

இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையைத் தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"எங்கப்பாகிட்ட மட்டும் பணம் இருந்தா நான் பெரிய ஆளாகியிருப்பேன்'' என்று எத்தனை பேர் ஜல்லியடிக்கிறார்கள் பாருங்கள்.
இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும் காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள் தான்..

பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி-கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை.. அது நம் மனதில் இருக்கிறது.. பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது..

ஒரு இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம்!

Life Story #9

*தினம் ஒரு கதை..*

_பறக்கும் பருவத்தை அடைந்த இரண்டு வெள்ளை நிற புறாக்களின் தாய் தனது இரண்டு குஞ்சுகளின் திறமையினையும் பரிசோதிப்பதற்காக ஒருநாள் தனது இரண்டு குஞ்சுகளையும் அழைத்து.._

_*உங்களுக்கு பறந்து இரை தேடும் அளவுக்கு சிறகுகள் வளர்ந்துவிட்டன.. நீங்கள் இனி தாராளமாக வெளியில் பறந்து சென்று உங்களது இரைகளை தேடி பெற்றுக்கொள்ளுங்கள்,*_
*_நீங்கள் இரையை பெற்றுக்கொள்ளும் ரகசியத்தை மாத்திரம் ஒருத்தரிடம் ஒருத்தர் சொல்லிக்கொள்ளக்கூடாது_* _என கண்டிசன் போட்டு_ _*இன்றில் இருந்து நான் உங்களுக்கு சாப்பாடு தருவதை நிறுத்திக்கொள்கின்றேன்*_ _எனக்கூறியது தாய் புறா.._

_இரண்டு குட்டிப்புறாக்களும் தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க தங்களது இரையை தேட ஆரம்பித்தன.._

*_அதில் ஒரு புறா தினமும் காலையில் சேற்றில் விழுந்து அழுக்காகிக்கொண்டே இரை தேட ஆரம்பிக்கும் இரை தேடி முடிந்ததும் ஆற்றில் கழுவிக்கொண்டு வீடு செல்லும்.._*

_இதைப்பார்த்த மற்றப்புறா_ _*நீ அழுக்கோடு என்னுடன் வருவதால் எனக்கு கேவலாமாக இருக்கின்றது.. உன்னை பார்க்கும் மனிதர்கள் எல்லாம் உன்னை கவனிக்காமல் ஒதுக்கி விடுகின்றார்கள், என்னை பார்க்கும் மனிதர்கள் எல்லாம் என் அழகை ரசிக்கின்றார்கள்.. நீ முட்டாளைப்போல நடந்துகொள்ளாதே..*_ என தினமும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும்..

சரியாக இரண்டு வாரங்கள் கழிந்து தாய்ப்புறா தனது இரண்டு குஞ்சுகளையும் அழைத்து சோதனை செய்ததில் ஒரு புறா நன்றாக கொழுத்துப்போய் இருந்தது மற்றப்புறா எலும்பும் தோலுமாய் இருந்தது..

_கொழுத்துப்போய் இருந்த புறாவை அழைத்து_ _*நீ இவ்வளவு பிரகாசமாக இருக்கின்றாய்.. உனது சகோதரன் ஏன் இப்படி எலும்பாக தேய்ந்துள்ளான்?*_ எனக்கேட்டது..

அம்மா _*நான் தினமும் காலையில் சேற்றில் குளித்துக்கொண்டு இரை தேடச்செல்வேன்.. நான் அழுக்காக இருப்பதால் மனிதர்கள் யாரும் என்னை கண்டுகொள்ளமாட்டார்கள்.. நான் விரும்பியவாறு விரும்பிய இடத்தில் எனது வயிறு நிறைய இரைகளை பெற்றுக்கொள்வேன்..*_

*_அண்ணன் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால்.. அவனால் நிம்மதியாக இரை தேட முடிவதில்லை.. மனிதர்கள் அவனை கண்டால் பிடிப்பதற்கு துரத்துகின்றார்கள்.. அதனால் அவன் இரை தேடும் நேரத்தை விட உயரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் நேரமே அதிகம்.. அதனால் குறை வயிற்றோடு தினமும் திரும்பி விடுவான்.. ஆகவேதான் அவன் பசியால் வரண்டு மெலிந்து போய் உள்ளான்.._* என பதிலளித்தது..

இப்பதிலை கேட்ட தாய்ப்புறா தன் குஞ்சின் புத்திக்கூர்மையினை நினைத்து மெய்சிலிர்த்துப்போய் மற்றப்புறாவை அழைத்து _*உனது தம்பி எவ்வாறு நடந்து கொள்கின்றானோ அவ்வாறே நீயும் நடந்துகொள், அது உன்னையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும்.. உனது வயிற்றையும் குறைவில்லாமல் நிறைவடையச் செய்யும்..*_ எனப்புத்திமதி கூறி மறுநாள் காலை *தாய்ப்புறாவும் தனது குஞ்சுகளோடு சேர்ந்து சேற்றில் குளித்துக்கொண்டு இரை தேடச்சென்றது..*


👇
*நாம் எவ்வளவுதான் அழகு மற்றும் அறிவோடு இருந்தாலும்.. இடத்துக்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக் கொள்ளாவிடின் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் முடியாது.. நிம்மதியாக வாழவும் முடியாது..*


Life Story #8

*தினம் ஒரு கதை..*


மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்..

(தொடர்ச்சி அடுத்த பாகத்தில்..)

Life Story #7

*தினம் ஒரு கதை..*
_ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் வாழ்ந்து வந்தனர்.._

*_நீண்ட நாட்களாக வைத்தியர் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.._*

_கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!_

_வைத்தியரும் சொன்னதில்லை!_

*_மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்!_*

_இப்படியே பல ஆண்டுகள் கழிந்து.. இருவருக்குமே வயதாகிவிட்டது.._

_*ஆனாலும் வைத்தியர் தேடுவதை நிறுத்தவில்லை!*_

_ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியை காணவில்லை.._

_*மாறாக இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்..*_
*_வைத்தியரை  பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினாள்._*

_வைத்தியருக்கு ஒன்றும் புரியவில்லை.._

*யாரம்மா நீ..?* என்று கேட்டார்..

அதற்கு அந்த இளம்பெண்.. *நான்தான் உங்கள் மனைவி* என்றாள்..

_வைத்தியருக்கு மிகவும் குழப்பம்.._

*என்ன நடந்தது..?* என்று கேட்க..

 _மனைவி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.._
_*"உங்களுக்காக கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தேன்.. காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது.. அதனால், அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன்.. கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது.. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன்.. நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன்.. குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளம் பெண் ஆகிவிட்டேன்"*_ என்றாள்

_வைத்தியர் பதறி அடித்துபோய்_ _*"எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் "*_ என்று கேட்க..

அதற்கு அந்த மனைவி _*"அந்த குச்சியை  நான், அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? "*_ என்றாள்..

*வைத்தியர் நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!..*

👇
*நம்பிக்கையானவர்களுக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..*

*அப்படி செஞ்சால் அது அவர்களுக்கு தான் லாபம்..*

*சொல்லாமல்.. மறைப்பவர்களுக்கு எப்பவுமே அல்வா தான்..*

Life Story #6

*தினம் ஒரு கதை..*🐝

_அற்புதமான சிற்பி ஒருவர், ஒருநாள் கடைத்தெருவில் நடந்து போய் கொண்டிருந்தார்.._

_அப்பொழுது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.._
_ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி,_

_அதன் பின் அந்தக் கடைக்காரரிடம்,_ *'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?'* என்று கேட்டார்..

*'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள்.. இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது.. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்'* என்றார் கடைக்காரர்..

_பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி,_

_அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.._

_அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது.._

_போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர்.._

*_அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.._*

_முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.._

_அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர்,_ *'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'* என்று கேட்டார்..

அதற்கு சிற்பி, *'வேறு எங்கிருந்தும் இல்லை. .தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன்..*

*என்னை தங்களுக்கு நினைவில்லையா? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்..*
கடைக்காரர் வியந்தார்..

*_ஆம்.. தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது.. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.._*

*வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன்.. உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!'* என்றார்..


👇
*ஆம்..*  _*தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய்,*_
_*ஒவ்வொருவரும்  நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்..*_

Life Story #5

*தினம் ஒரு கதை..*

_ஒருவர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க எண்ணி, ஒரு சிற்பியை காண சென்றார்.._

_அவர் சென்றபொழுது அந்த சிற்பி ஒரு கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.._

_கொஞ்ச நேரம் சிற்பி சிலை செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்,_
_*அதே மாதிரி செதுக்கிய இன்னொரு சிலை அங்கு கிடப்பதை கவனித்தார்..*_

உடனே அவர் சிற்பியிடம், *”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி இரு சிலைகள் வைப்பார்கள்?* *_இல்லை.. இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?”_* என்று சிற்பியிடம் கேட்டார்..

சிற்பி சிரித்துக்கொண்டே,
_*“இல்லை ஐயா.. கீழே கிடக்கும் சிலையில் பிழை உள்ளது..”*_ என்றார்..

அவர் ஆச்சரியத்துடன், _*"என்ன சொல்றீங்க.. மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை.. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!"*_ எனக் கேட்டார்..

_*"அந்த சிலையின் இடது காதில் சின்ன கீறல் இருக்கிறது.. பாருங்கள்"*_ என்றார் சிற்பி..

_*“ஆமாம்!. அது சரி.. இந்த சிலையை கோவிலில் எங்கே வைக்கப் போகிறார்கள்?”*_ என்று கேட்டார்..

_*“இது கோவில் கோபுரத்தில், இருபது அடி உயரத்தில் வரும் சிலை!”*_ என கையை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி..

அவர் வியப்புடன், _*”இருபது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் மடத்தனமாக இன்னொரு சிலை செய்கிறீர்கள்..!”*_ என்றார்..

_*“அந்த சிலையில் கீறல் இருப்பது, எனக்கு தெரியுமே! எப்போது அந்த கோவில் வழி சென்றாலும், எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே.. அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன்”*_ என்றார் சிற்பி..

_வந்தவர் சிற்பியின் தொழிற்பக்தியை எண்ணி தனக்கான சிலையை தாங்களே செய்யவேண்டும் என்று கூறி சென்றார்.._


👇
*_அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்வதை விட.._*

*_நம் மனத்திருப்திக்காக வேலை செய்வதே சிறந்ததாகும்.._*

Life Story #4

*தினம் ஒரு கதை..*🐝

ஒரு ஊரில் *அவன்-இவன்* என இரு நண்பர்கள் இருந்தார்கள்..

_அதில் அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தைக் கொண்டவன்.._

_அவனை இவன் மாற்ற எண்ணி.._
_அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையைக் கொடுத்தான் இவன்.._

*நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ..? அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும்* என்றான் இவன்..

அவனும் அப்படியே செய்தான்..
*முதல் நாள் அவன் 35 ஆணிகளை* அடித்தான்..

*மறு நாள் 30* _என்று இப்படியாக குறைந்துகொண்டே வந்தது.._

*_சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான்.._*

அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை.

*_அதை நண்பன் பார்த்துப் பெருமைப்பட்டான்.._*

அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட இவன், *அவனிடம் அடித்த ஆணிகளை எல்லாம் பிடுங்கச் சொன்னான்..*

அவனும் அப்படியேச் செய்தான்..

_அதை பார்த்த இவன் அவனிடம் சொன்னான்.._
*நண்பனே.. நீ நான் சொன்னபடியே நீ அடித்த எல்லா ஆணிகளையும் பிடிங்கிவிட்டாய்..*

ஆனால் *ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளைப் பார்.. இந்த சுவர் முன் இருந்த மாதிரி இல்லை.. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன..*

*அது போலத் தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும்..*

*_நீ என்ன தான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது.._*
*நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும்,* _*செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை..*_ என்றான் நண்பன்..

அவன் *இனி எக்காலத்திலும் கோபப்படுவதில்லை என உறுதி எடுத்துக்கொண்டான்..*

Life Story #3

*தினம் ஒரு கதை..*🐝
_ஒரு இளம் தம்பதி புதிதாக ஒரு வீட்டிற்கு குடி போனார்கள்.._

_அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.._

_பக்கத்து வீட்டுப் அம்மா ஒருவர் துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.._

_பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,_
*“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது.. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்..”*

_கணவனும் பார்த்தான்.._

_ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.._

_தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டு அம்மா துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.._

_திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டு அம்மா துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,_
*“அப்பாடா, இன்று தான் அந்தம்மாள் துணி துவைக்கக் கற்றுக் கொண்டாளோ..? இல்லை, நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா..? என்று தெரியவில்லை..*

*இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..!* என்றாள்

கணவன் அமைதியாகச் கூறினான்,
*“இன்றைக்கு அதிகாலையில் தான்.. நான், நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்..”* என்று..


👇
*நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன..*

*ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை..*

*ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...?..!*

பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில்..?

*குற்றம்* என்பது
அடுத்தவர் செய்யும்போது மட்டும் தெரிவது..

*மனிதம்* என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது...!!   

👇
*பிறர் குறைகளை பூதக் கண்ணாடி வைத்து பார்க்காமல்,*
*நம் அகமறிந்து, நம்மிடம்  உள்ள குறைகளை, களைந்து வாழ்வோம் வளமாக..*

Life Story #2

*தினம் ஒரு கதை..*🐝

*பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார்..*

_தன் வேலைக்காரனை அழைத்து,_
*"இந்த வாழைத் தாற்றைக் கோவிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா.."* என்றார்..

_வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்_

_அன்றிரவு_ பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன்,
*"நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது.."* என்றார்..

_திடுக்கிட்ட பண்ணையார்,_
*"இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்.."* என்றார்..

*"இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது.."* என்றார் இறைவன்..

_விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து_
*"நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோவிலில் கொண்டு சேர்த்தாயா.."* என்றார்..

அவன் *"ஆம்"* என்றான்..

*_பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது.._*

_அவர் வேலைக்காரனை வேகமாக ஓங்கி ஒரு அறை அறைந்தார்.._
*"உண்மையைச் சொல், இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன்.."* எனறார்..

அவன், *"உண்மையைச் சொல்லி விடுகிறேன், வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான்.. நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன்.. மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்.."* என்றான்..

*பண்ணையாருக்குப் புரிந்து விட்டது..*

_*ஏழைக்குக் கொடுத்த பழமே இறைவனைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.. கோவிலுக்குக் கொடுத்த பழம் சேரவில்லை..*_


👇
_*கோவிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது  ஏழைகளுக்கு போய்ச் சேராது..*_
ஆனால்
_*ஏழைகளுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது இறைவனிடம் போய்ச் சேர்ந்து விடும்..*_

👇
_*கோவிலில் போய்க் கொடுப்பதும், ஏழைகளுக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம்..*_
*_ஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி.. இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை.. அதில் போட்டால் அது இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்.._*

*இதையே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார்கள்..*

Life Story #1

*தினம் ஒரு கதை..*


_*எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..*_
_அதை கண்ட வியாபாரி.._
_மிகவும் கவலை கொண்டான்.._
*_மிக விலை உயர்ந்த வைரம்.._*
_*எப்படியாவது அதனை எடுத்து விடவேண்டும்..*_
என்று
_எலி பிடிப்பவனை நாடினார்.._

_வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து_ _*எப்படியாவது அந்த எலியை பிடித்து வைரத்தை எடுக்க உதவ வேண்டும்*_ என கேட்டுக் கொண்டார்..

_எலி பிடிப்பவனும் தன் வலையுடன் வந்துவிட்டான்.._

_*எலி அங்கே இங்கே என்று ஓடி போக்கு காட்டியது..*_

*திடீரென்ற ஆயிரக்கணக்கான சக எலிகள் அங்கு ஒன்று கூடிவிட்டன..*

_*எலி பிடிப்பவன் சற்று நேரம் குழம்பிவிட்டான்..*_

சிறிது நேரத்தில்..
*_ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும்.. ஒரு எலி மட்டும் அந்த கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது.._*

_எலி பிடிப்பவன் சிந்தித்தான்.._ _அதுவே அவனுக்கு வசதியாக போய் விட்டது.._

*_சரியாக குறி பார்த்து அந்த ஒரு எலியை மட்டும் நோக்கி  வலையை வீசினான்.._*

எலி பிடிபட்டது..

_*வைர வியாபாரி அந்த எலியின் வயிற்றை சோதித்து பார்த்தார்..*_
*அதில் வைரம் இருப்பது உறுதியானது..* _பின்னர் அதன் வயிற்றை கிழித்து வைரத்தை எடுத்துக் கொண்டார்.._

_எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி_ *மகிழ்ச்சி.. ஆனால் ஒரு சந்தேகம்..*
_ஆமா..!_ _*நீ எப்படி அந்த எலிதான் வைரம் விழுங்கிய எலியென்று சரியாக அடையாளம் கண்டு அதை பிடித்தாய்..?*_ என்றார்..

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்..
_*ஒரு எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே!*_ அப்போதே புரிந்தது..
*வைரம் வயிற்றில் இருந்தால்..*
*கர்வம் தலைக்கு போய்விடும்..* என்று..
_இப்படித்தான்.._
*பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல்,*
*தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்* அதுவே..
*ஆபத்து நேரத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது என்றான்..*


👇
*அப்படித்தான் சிலர் இடையில் வந்து அழிந்து போகும் செல்வத்தை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்துவிடுகிறார்கள்..*

_ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும்_ *_சொந்த பந்தமும், நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்.._*

பொக்கிஷங்கள்! 32

பொக்கிஷங்கள்! 32

1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
...
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்

Friday, 26 October 2018

#437 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 444 உட்கப் படாஅர் | Daily one thiru...

எல்லோருக்கும் உண்டான வயதில் கிடைப்பது அரிது...

💫💗எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது...

💗🙏🏻ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்...

💗👌🏻ஆனால் டொனால்ட் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார்...

💗👍🏻பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார்...

💫🙏🏻ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார்...

💗👍🏻ஒருவருக்கு அவர் விரும்பிய வேலை வாய்ப்பு தானாகவே தேடி வருகிறது...

💗🤷🏻‍♂இன்னொருவருக்கோ எல்லா திறமைகள் இருந்தும் சரியான வேலையோ அல்லது தொழிலோ அமைவது இல்லை...

💶🤦🏻‍♂22 வயதில் தனது வியாபாரம் தொழிலில் கோடீஸ்வரரான ஒருவர் 45 வயதில் எல்லாம் இழந்து ஏழ்மை ஆகிறார்...

💶👍🏻ஒருவர் 40 வயது வரை தன் தொழில் வியாபாரத்தில் சகல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து 50 வது வயதில் கோடீஸ்வரர் ஆகிறார்...

👌🏻💗எம்ஜியார்க்கு மொத்தம் 70 வயதுவரை வாழ்க்கை வரலாறு. அதில் *முதல் 40 வயது வரை வாழ்க்கையில் பயங்கர கஷ்டம்.*
கடைசி 30 வருடங்கள் சாகும்வரை ராஜயோக வாழ்க்கை...

🤷🏻‍♂சர்ச்சில் தனது 82 வது வயதில் History of English Speaking People என்ற புத்தகத்தை எழுதினார்...

🤷🏻‍♂பெர்னாட்ஷா தனது 93 வது வயதில் Pertouched Pepler என்ற நாவலை எழுதினார்...

🤷🏻‍♂👌🏻டால்ஸ்டாய் தனது 82 வது வயதில்
I Cannot Be Silent என்றார்...

🤷🏻‍♂🥧வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது 50 வது வயதை தாண்டிய பிறகே 37 நாடகங்களை இயற்றினார்...

🤗🥧எல்லோருக்கும் எல்லாமும் அததற்கு உண்டான வயதில் கிடைப்பது அதிர்ஷ்டம் தான்...

🤷🏻‍♂👍🏻எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள்...

🤷🏻‍♂👍🏻உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள்...

💶🤷🏻‍♂யார் கண்டது, ?
அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று,..!!

🤷🏻‍♂🥧இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். !!!

💫👍🏻எனவே எதிர்காலத்தில் நடக்க விருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது இயலாது...

😐💪🏻இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள்...

🤗💗அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும்...

🤷🏻‍♂🥧தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும்...

🤷🏻‍♂👍🏻ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது...

🤷🏻‍♂💵இது தான் வாழ்க்கை
இதைப் புரிந்து கொண்டவர்கள் மட்டுமே
*மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்...

💫🎂🥧💗🤷🏻‍♂👍🏻

எதார்த்தமான உண்மைகள்... Must read and Share

*எதார்த்தமான உண்மைகள்..

😜
*1.* கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்.,
*உருவம் கொடுத்த பின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்..!*

*(நம்ம ஊரு டிசைன் அப்படி)*

😜
*2.* கும்பிடும் வரை கடவுள்;
*திருட்டுப் போனால் சிலை...!*

*(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)*

😜
*3.* எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!*

*(மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)*

😜
*4.* தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும்
*அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது...!*

*(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)*

😜
*5.* ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது
*ஒரு தீ குச்சியின் மரணம்..!*

*(மரணம் ஒரு முடிவு அல்ல... !)*

😜
*6.* வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட
*வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை...!*

*(நிதர்சனமான உண்மை)*

😜
*7.* அவசரத்துக்கு ஒரு கொத்தனாரைக் கூட  தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, *தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க ..! ஏன் இந்த கொடுமை..!*

*(ஊருக்கு ரெண்டு இன்ஜினீயரிங் காலேஜ் தான் காரணம்)*

😜
*8.* இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். *ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல...!*

*(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)*

😜
*9.* இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். *வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!*

*(எல்லாம் பீஸ் தான் காரணம்)*

😜
*10.* இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு,
*இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு...!*

*(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)*

😜
*11.* 250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும்
*இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!*

*(லஞ்சம் தான் காரணம்)*

😜
*11.* மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்.
*இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!*

*(யூஸ் பண்ணத் தெரியல..அவ்ளோதான்)*

😜
*12.* தூக்கம் வராமல் முதலாளி...
*தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!*

*(கரன்சி பண்ற வேலை)*

😜
*13.* கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..!
*கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் உங்களுக்கு தெரிவதில் இல்லை...!*

*இது மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை*
👍👍👍👍👍👍👍
📚படித்ததிலிருந்து பிடித்த *மனதை நெ௫டிய* ஒரு பதிவுகள் *&* பகிர்வுகள்...

Sunday, 7 October 2018

#418 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1010 சீருடைச் செல்வர் | Daily one t...

#417 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 773 பேராண்மை என்ப | Daily one thiru...

#416 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 153 இன்நம்யுள் இன்மை | Daily one th...

#415 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1222 புன்கண்ணை வாழி | Daily one thi...

#414 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 491 களித்தொறும் கள்ளுண்டல | Daily o...

#413 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1145 களித்தொறும் கள்ளுண்டல | Daily ...

#412 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 385 இயற்றலும் ஈட்டலுங் | Daily one ...

#411 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 22 துறந்தார் பெருமை | Daily one thi...

#410 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 608 மடிமை குடிமைக்கண் | Daily one t...

#409 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 227 பாத்தூண் மரீஇ | Daily one thiru...

#408 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 119 சொற்கோட்டம் இல்லது | Daily one ...

#408 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 119 சொற்கோட்டம் இல்லது | Daily one ...

#407 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1220 நனவினால் நம்நீத்தார் | Daily o...

Friday, 5 October 2018

ரெட் அலர்ட் என்றால் என்ன?

ரெட் அலர்ட் என்றால் என்ன?

தற்பொழுது வானிலை மையங்கள் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தையான ரெட் அலர்ட் என்றால் என்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தி.

அடுத்த 5 நாட்களில் வானிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது போல் அறியும்பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். அந்த எச்சரிக்கையானது பச்சை எச்சரிக்கை (Green Alert ), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) , ஆம்பர் எச்சரிக்கை ( Amber Alert)  மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) என மொத்தம் நான்கு வகைகளாக பிரிக்கப்படுகிறது.

பச்சை எச்சரிக்கை கொடுக்கப்பட்டால், மக்கள் அச்சப்படத்தேவையில்லை. ஏனெனில், மழை பொழிவதற்கான அறிகுறி தென்பட்டால் மட்டுமே பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை கொடுத்தால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படும் வகையில் வானிலை இருக்கும் பட்சத்தில் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அப்பொழுது, பயணம் செய்வதை மக்கள் தவிர்க்கவேண்டும்.

மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்படும். அதாவது, மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு முதலிய மக்களின் இயல்பு வாழக்கையினை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது.

தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Monday, 1 October 2018

நீதிபதிகள் வழங்கும் முக்கிய பத்து கட்டளைகள் (ஆலோசனைகள்)

*_குடும்ப நல வழக்குகளைக் கையாண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் முக்கிய பத்து கட்டளைகள் (ஆலோசனைகள்)_*


_1) உங்கள் மகன் மற்றும் மருமகளை உங்களோடு ஒரே வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டாம்.வாடகை வீட்டிலாவது தனியாக குடியிருக்கச் செய்யுங்கள்.தங்களுக்கென்று ஒரு குடியிருப்பை தேடிக் கொள்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி ஏற்படுத்துகிறீர்களோ அவ்வளவு பிரச்சனைகளை உங்கள் மருமக்களோடு தவிர்க்கலாம்._

_2) உங்கள் மருமகளை உங்கள் மகள் போல பார்த்துக் கொள்ள வேண்டாம்.உங்கள் மகனின் மனைவியாகவே நினைத்துக் கொள்ளுங்கள்.அல்லது அவளை ஒரு தோழியாக பாருங்கள்.உங்கள் மகன் உங்களுக்கு கீழ்ப்பட்டவன் என்று நினைப்பது போல் அவன் மனைவியும் உங்களுக்கு கீழ்ப்பட்டவள் என்று நினைத்து திட்டி விடாதீர்கள்.ஏனென்றால் அவள் காலத்திற்கும் அதை நினைவில் வைத்திருப்பாள்.தன்னை திட்டுவதற்கும்,சரிப்படுத்துவதற்கும் தன்னுடைய தாயாருக்கே அன்றி வேறொருவருக்கும் உரிமையில்லை என்று எண்ணுவாள்._

_3) உங்கள் மகனின் மனைவி எப்படிப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் குணமுடையவராயிருந்தாலும் அது உங்களை பாதிக்க வேண்டாம்.அது முற்றிலும் உங்கள் மகனின் பிரச்சனை.உங்கள் மகன் முதிர்ந்தவனாகவும்,மனப்பக்குவமுள்ளவனாகவும் இருப்பதால் இதை உங்கள் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்._

_4) சில சமயம் கூட்டாக வாழும் போது வீட்டு வேலைகளை குறித்து தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் அவர்கள் துணிகளைத் துவைப்பதற்கும் அவர்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதற்கும் எந்த அவசியமும் இல்லை.உங்கள் மருமகள் உங்களிடம் உதவி கேட்டால் உங்களால் முடிந்தால் செய்து கொடுங்கள்.பதிலுக்கு எந்த நன்றியையும் எதிர்பாராதிருங்கள். மேலும் உங்கள் மகனின் குடும்பத்தைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.அவர்கள் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்._

_5)உங்கள் மகன் மற்றும் மருமகள் சண்டையிடும் போது காது கேளாதோர் போல் இருந்து கொள்ளுங்கள்.இளம் தம்பதியர் தங்கள் பிரச்சனைகளில் பெற்றோர் தலையிடுவதை விரும்புவதில்லை._

_6)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.குழந்தைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும் என்பது உங்கள் பிள்ளைகளை பொறுத்த ஒன்று.நற்பெயரோ அவப்பெயரோ அது உங்கள் பிள்ளைகளையே சாரும்._

_7) உங்கள் மருமகள் உங்களை கவனிக்கவும் நேசிக்கவும் அவசியமில்லை.அது உங்கள் மகனின் கடமை.இதை உங்கள் மகனுக்கு நீங்கள் புரிய வைத்திருப்பீர்களானால் உங்களுக்கும் உங்கள் மருமகளுக்கும் நல்ல உறவு அமையும்._

_8) நீங்கள் பணி ஓய்வு பெற்ற பின் உங்கள் பிள்ளைகளை சார்ந்து கொள்ளாதீர்கள்.உங்கள் காரியங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை தனியே சமாளித்த உங்களால் இனி வரும் காலத்தையும் பார்த்துக் கொள்ள முடியும்.இன்னும் புதிய அனுபவங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்._

_9)உங்கள் பணி ஓய்வு காலத்தை சந்தோஷமாக வாழுங்கள்.நீங்கள் சம்பாதித்த உங்கள் பணத்தை உங்கள் நலனுக்காக செலவு செய்யுங்கள்.உங்கள் மகனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடவேண்டாம்.இறுதியில் உங்கள் பணம் உங்களுக்கு பயனில்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது._

_10)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் சொத்தல்ல.அது உங்கள் பிள்ளைகளின் விலையேறப்பெற்ற பரிசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்._

*_குறிப்பு:_*
_இந்த பத்து கட்டளைகள் நீங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல,உங்கள் நண்பர்கள்,சொந்தங்கள், பெற்றோர்கள்,பிள்ளைகள்,கணவன் மற்றும் மனைவி எல்லோருக்கும் பகிருங்கள்.... எல்லோரும் வாழ்வில் அமைதியும் முன்னேற்றமும் பெறுவதற்கான வாழ்க்கைப் பாடமே இவைகள்._

மனைவியை ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்ற கணவர்!

மனைவியை ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்ற கணவர்!

👉 *நடந்தது என்ன?*


ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் கணவர்…

அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
*பெரிய பெரிய கற்களைக்* காண்பித்தார்.

இந்தப் பையை அந்தக் *கற்களால்* நிரப்பு என்றார்.

மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.

இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.

கணவர் கீழே கிடந்த *கூழாங்கற்களில்* சிலவற்றை எடுத்தார்.

அதே பையில் போட்டுக் குலுக்கினார்.

அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.

இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?
” கேட்டாள் மனைவி.

கணவர் அங்கேயிருந்த *மணலை* அள்ளிப் பையில் போட்டார்.

பையை மேலும் குலுக்கினார்.

*கற்கள், கூழாங்கற்கள்* இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் *மணல்* இறங்கியது.

இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால்,
பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ?

என்று *கணவர்* கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் *மனைவி.*

வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய

1). *அன்பு,கருணை,*
*உடல்நலம்,மனநலம்,* போன்ற உன்னதமான விஷயங்கள்,
*பெரிய கற்கள் போன்றவை.*

2). *வேலை,வீடு,கார்,* போன்ற செல்வங்கள் *கூழாங்கற்களுக்குச் சமமானவை.*

3). *கேளிக்கை,வீண் அரட்டை* போன்ற அற்ப விஷயங்கள் இந்த *மணல் போன்றவை.*

*முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்*

அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.

ஆனால்,

உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால்,

👉முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.

வாழ்வதுஒருமுறை
வாழ்த்தட்டும்தலைமுறை

Monday, 24 September 2018

#405 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 143 விளிந்தாரின் வேறல்லர் | Daily o...

கள்ளச்சிரிப்பு என்றார்கள்...!

*😃முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்😃*
😂"கள்ளச்சிரிப்பு " என்றார்கள்😂
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

☺கோபங் கொண்டேன்☺
☺" சிடுமூஞ்சி" என்றார்கள்.☺
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

👨அதிகம் பேசாமலிருந்தேன்,
👨" ஊமையன்" என்றார்கள்.👨
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

❤சளசளவென்று பேசினேன்...!!❤
❤" ஓட்டவாய் " என்றார்கள்.❤
⚘⚘⚘⚘⚘⚘⚘

💙புதிய தகவல்களை பரிமாறினேன்💙
💙" கருத்து கந்தசாமி " என்றார்கள்.💙
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💚அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,💚
💚" ஜால்ரா " என்றார்கள்.💚
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💖எல்லா செயல்களிலும்
முன் நின்று செய்தேன்....!!💖
💖முந்திரிக்கொட்டை என்றார்கள்.💖
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💛அவர்களைப் பின் தொடர்ந்தேன்,💛
💛" நடிப்பு" என்றார்கள்.💛
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

🍁யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்🍁
🍁" ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.🍁
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

🌻வணங்குவதை நிறுத்தினேன்,🌻
 🌻"தலைக்கனம்" என்றார்கள்.🌻
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

🌺ஆலோசனை வழங்கினேன்,🌺
🌺" படிச்ச திமிர்" என்றார்கள்.🌺
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💓சுயமாக முடிவெடுத்தேன்,💓
💓" அதிபுத்திசாலி "
என்றார்கள்.💓
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

😥நான் கண்ணீர் விட்டு அழுததால்,😥
 😥"வேஷக்காரன்" என்றார்கள்.😥
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💕நான் சிரித்த போதெல்லாம்,💕
 💕மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்💕
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💚எதிர்கேள்வி கேட்டால்,💚
💚வில்லங்கம் என்றார்கள்💚
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💖ஒதுங்கி இருந்தால்,💖
💖"பயந்தாங்கொள்ளி " என்றார்கள்.💖
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

💛உரிமைக்குப் போராடினால்,💛
 💛"கலகக்காரன் " என்றார்கள்.💛
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

❤எதற்கும் கலங்காமல் இருந்தால்,❤
❤"கல் நெஞ்சன்" என்றார்கள்.❤
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

🌻"நாலு பேர் என்ன நினைப்பார்கள்🌻.....?

"🌺நாலுபேர் என்ன பேசுவார்கள்🌺......?"
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

✡யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்.✡..!!

🌷தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.🌷......!!
🌷🌷🌷🌷🌷🌷🌷

💣அந்த நாலு பேரை கழற்றி விட்டு.......,💣

🔔என்னை அணிந்துக் கொண்டேன்🔔.
🌷🌷🌷🌷🌷🌷🌷

💖துலங்கத் துவங்கியது
எனக்கான வாழ்வின் துளிர்...💖

❤வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக

❤குறிப்பாக
           ❤மிக  நிம்மதியாக.❤

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Saturday, 22 September 2018

இது விவசாயின் கண்ணீர் 😭😭😭😭😭 மட்டும் அல்ல உயிர்...

🌴மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக சமுதாயம் மறுக்கிறது,

🌴விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல,

🌴எதிர் காலத்தில் எதை உண்ணுமோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல,

🌴திருமணத்தில் நான் விளைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்,

🌴மணமேடைக்கு மண்கரை படித்த என்னை வேண்டாம் என்றார்கள்,

🌴எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயம்
திருமண நேரத்தில் வெளுத்துபோனதே சாயம்,

இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்...😭😭😭

விளைவித்தவன்
பிச்சைக்காரன்...!!

விலை வைத்தவன்
இலட்சக்காரன்...!!

இரண்டு கோடிகள் கொடுத்து
ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!

இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!

இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்..!!

இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்
தள்ளுபடி செய்யும்
எங்கள் தேசத்தில்...!!

இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!

எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான்
எவருமில்லை....!!

இப்படிக்கு:  விவசாயி மகன்.

🌳விவசாயிக்கு மதிப்பு கொடுங்கள்

படித்து வருந்தியது!!!
🌳🤝🤝🤝💪💪💪🙏🙏🙏🙏🙏🙏

இந்த பதிவை அலச்சிய படுத்தாதீர்

இது விவசாயின் கண்ணீர் 😭😭😭😭😭 மட்டும் அல்ல உயிர் ☘